"உலக அளவில் இந்தியப் பொறியாளர்களுக்கு தனிஇடம் உருவாகியுள்ளது'
உலக அளவில் இந்தியப் பொறியாளர்களுக்கு தனிஇடம் உருவாகியுள்ளது என்றார் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் சிவில் துறை இணைப் பேராசிரியர் கே. சுடலைமண
உலக அளவில் இந்தியப் பொறியாளர்களுக்கு தனிஇடம் உருவாகியுள்ளது என்றார் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் சிவில் துறை இணைப் பேராசிரியர் கே. சுடலைமணி.
புதுக்கோட்டை கைக்குறிச்சி பாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில் கட்டடவியல் துறை சார்பில் கான்கிரிட்டின் நீண்டகாலப் பயன்பாடு என்ற தலைப்பில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான ஒருநாள் பயிலரங்கை தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியது:
இங்குள்ள மாணவிகள் அனைவரும் பொறியாளர்களாக உருவாகி ஏதாவது வகையில் சாதனை புரிய வேண்டும் எனக் கனவு கண்டு கொண்டிருப்பீர்கள். அந்த கனவு எதுவாயினும் அதை நிறைவேற்ற
Advertisement
Advertisement
மிகப்பெரிய அளவுக்கு சிந்திக்க வேண்டும். பல்வேறு அரிய தொழில் சார்ந்தவற்றை உருவாக்கி மூன்றாவது தொழில் புரட்சியில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும். உலக அளவில் இந்திய பொறியாளர்களுக்கு தனி இடம் உருவாகி இருக்கிறது. நீங்கள் படிக்கும் விஷயங்கள் அனைத்தையும் பல்வேறு துறைகளில் உள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு பயன்படுத்த முடியுமா எனச் சிந்திக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார். செயலர் கே.ஆர். குணசேகரன், அறங்காவலர் உறுப்பினர்கள் கே. ரெங்கசாமி, அ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சரவண. திலகவதி பேசினார்.
இதில், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 125 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். சென்னை எல்அன்டி நிறுவனத்தின் சிறப்பு பொறியியல் மேலாளர் எஸ். வீரமணி மாணவிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கினார். முன்னதாக துறைத் தலைவர் தங்கராஜ் வரவேற்றார். மாணவி பி. பரிதாபேகம் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.