புதுக்கோட்டை

கந்தர்வகோட்டையில் திருட்டு மணல் ஏற்றி வந்த 7 லாரிகள் பறிமுதல் 

கந்தர்வகோட்டையில் திருட்டு மணல் ஏற்றி வந்த  7 டாரஸ் லாரிகளை காவல்துறையினர் வியாழக்கிழமை மணலுடன் பறிமுதல் செய்தனர். 

DIN

கந்தர்வகோட்டையில் திருட்டு மணல் ஏற்றி வந்த  7 டாரஸ் லாரிகளை காவல்துறையினர் வியாழக்கிழமை மணலுடன் பறிமுதல் செய்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் நடுப்பட்டி அருகே புதன்கிழமை இரவு கந்தர்வகோட்டை காவல் உதவி ஆய்வாளர் ஜெ. ராமன் காவலர்களுடன் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.  

அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிவந்த 7 டாரஸ் லாரிகளை மறித்து விசாரணை செய்த போது உரிய அனுமதியின்றி தஞ்சாவூர் பகுதியிலிருந்து மணல் திருடி வந்ததாக தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து மணலுடன் 7 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். இதில் லாரி ஒட்டுநர் 3 பேர் தப்பியோடி விட்டனர். மற்ற நான்கு பேரை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

டிசிஎஸ் 3வது காலாண்டு லாபம் 14% சரிவு!

சிபிஐ வலையில் சிக்கிக்கொண்ட விஜய்! - செல்வப் பெருந்தகை | செய்திகள் : சில வரிகளில் | 12.1.26

மமதா மீது சிபிஐ வழக்குப் பதிய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு!

குளிர் அலை: அதிகாலையில் நடைப்பயிற்சி வேண்டாமே! செய்யக்கூடாதவை..

SCROLL FOR NEXT