ஆற்றுப் படிக்கட்டில் விழுந்த பெண் சாவு
தஞ்சாவூர் அருகே கல்லணையில் ஆற்றுப் படிக்கட்டில் தவறி விழுந்த பெண் அண்மையில் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் அருகே கல்லணையில் ஆற்றுப் படிக்கட்டில் தவறி விழுந்த பெண் அண்மையில் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், பாச்சூரைச் சேர்ந்த காத்தமுத்துவின் மனைவி கிருஷ்ணவேணி (60). இவர் அண்மையில் வீட்டில் கோபித்துக் கொண்டு கல்லணைக்கு வந்தார். அங்கு கல்லணைக் கால்வாயில் படிக்கட்டில் இறங்கிய இவர் தவறி விழுந்தார். கீழே விழுந்து பலத்த காயமடைந்த இவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கிருஷ்ணவேணி உயிரிழந்தார்.இதுகுறித்து தோகூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.