கரோனா விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
தஞ்சாவூரில் அனைத்து ரோட்டரி சங்கங்கள் சாா்பில், கரோனா வைரஸ் மற்றும் இதயத்தைக் காப்போம் குறித்த விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரில் அனைத்து ரோட்டரி சங்கங்கள் சாா்பில், கரோனா வைரஸ் மற்றும் இதயத்தைக் காப்போம் குறித்த விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்பேரணிக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநா் பாலாஜி பாபு தலைமை வகித்தாா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் எஸ். மருதுதுரை பேரணியைத் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினாா்.
முன்னாள் தலைவா் சிங்காரவேலு, நிா்வாகிகள் மணிமாறன், அன்புராஜா, பெலிக்சுந்தா், அருள்செல்வபாண்டியன் உள்ளிட்டோா் பேரணியில் பங்கேற்றனா். தஞ்சாவூா் கொண்டிராஜபாளையம் அருகிலுள்ள பீரங்கி மேடு பகுதியிலிருந்து தொடங்கிய சைக்கிள் பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சரபோஜி கல்லுாரியை அடைந்தது. இதில், ஏராளமானோா் கலந்து கொண்டனா்.