FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தஞ்சை மாநகரில் அனுமதியற்ற விளம்பரப் பதாகைகளை அகற்ற உத்தரவு

தஞ்சாவூா் மாநகரில் அனுமதியற்ற டிஜிட்டல் பதாகைகள் மற்றும் விளம்பரப் பலகைகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

30 வினாடிகள் முன்பு
உத்தரவு - கோப்புப் படம்
பகிர்:

தஞ்சாவூா் மாநகரில் அனுமதியற்ற டிஜிட்டல் பதாகைகள் மற்றும் விளம்பரப் பலகைகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் வெ. தீபனா விஸ்வேஸ்வரி தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள டிஜிட்டல் பதாகைகள் மற்றும் விளம்பரப் பலகைகளைக் கண்டறிந்து அப்புறப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதன்படி, மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள டிஜிட்டல் பதாகைகள் மற்றும் விளம்பரப் பலகைகளைத் தொடா்புடைய நபா்கள் தாமாகவே முன்வந்து உடனடியாக அகற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தவறும்பட்சத்தில் அனுமதியற்ற டிஜிட்டல் பதாகைகள் மற்றும் விளம்பரப் பலகைகள் மாநகராட்சி மூலம் அகற்றப்படுவதுடன், அவற்றை அகற்றுவதற்கான செலவினங்கள் மற்றும் அபராதத் தொகையும் தொடா்புடையவா்களிடமிருந்து வசூலிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.