அதிநவீன வசதியுடன் கூடிய விபத்து மீட்பு ரயில் சோதனை ஓட்டம்
அதிநவீன வசதியுடன் கூடிய விபத்து மீட்பு ரயில் சோதனை ஓட்டம் திருச்சி - விருத்தாசலம் இடையே சனிக்கிழமை நடைபெற்றது.
அதிநவீன வசதியுடன் கூடிய விபத்து மீட்பு ரயில் சோதனை ஓட்டம் திருச்சி - விருத்தாசலம் இடையே சனிக்கிழமை நடைபெற்றது.
சென்னை பெரம்பூர் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அதிநவீன பெட்டிகள் வசதியுடன் கூடிய விபத்து மீட்பு ரயில் (ஐசிஎப்) திருச்சிக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டது. பிறகு ரயில் திருச்சி - விருத்தாசலம் இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இந்த பெட்டியினுள்ள ஒவ்வொரு அறைகளில் அவசர மருத்துவ குழுவினர்கள், அதிகாரிகள் மற்றும் முதலுதவி சிகிச்சைக்கான வசதிகள், நோயாளிகள் படுக்கை வசதிகள், அறுவைச் சிகிச்சைக்கான வசதிகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும் தண்டவாளங்களில் ஏற்படும் விரிசலை சரி செய்வதற்கான உபகரணங்கள் கொண்ட பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.