FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விராலிமலையில் சாலை விபத்து: 2 பேர் காயம்

விராலிமலை நான்கு வழிச்சாலையில் சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

விராலிமலை நான்கு வழிச்சாலையில் சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி ஷோபனாதேவ் (27). இவர் தனது தந்தை பெருமாள்(55), தாய் முத்துலட்சுமி (45) ஆகியோருடன் காரில் தனது சொந்த ஊரான பொன்னமராவதிக்கு சென்று கொண்டிருந்தார். காரை சென்னை ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த மகேந்திரன் (25) ஓட்டிச் சென்றார். திருச்சி- மதுரை நான்கு வழிச்சலையில் காளப்பனூர் பிரிவு அருகே வந்த போது முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் காயமடைந்த பெருமாள், முத்துலட்சுமி இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஷோபனாதேவ், மகேந்திரன் இருவரும் லேசான காயமடைந்தனர்.

இதுகுறித்து விராலிமலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments