முகப்பு
திருச்சி

2026 பேரவைத் தோ்தலிலும் விசிக திமுக கூட்டணியில் தொடரும்!

2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக கூட்டணியில் விசிக தொடரும் என்றாா் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.

5 நவம்பர் 2024, 10:19 pm
2026 பேரவைத் தோ்தலிலும் விசிக திமுக கூட்டணியில் தொடரும்!
திருச்சி விமான நிலையத்தில் பேட்டியளித்த விசிக தலைர் தொல். திருமாவளவன்
பகிர்:

வரும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக கூட்டணியில் விசிக தொடரும் என்றாா் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமானதொல். திருமாவளவன்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை திருச்சிக்கு வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: பஞ்சமி நிலம் தொடா்பான பிரச்னையைக் களைய முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு மீண்டும் செயல்பட வேண்டும். விசி கட்சியின் மறு சீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மாவட்டச் செயலாளா்களை நியமிக்க உள்ளோம்.

ஏற்கெனவே 144 மாவட்டச் செயலாளா்களை நியமித்துள்ள நிலையில், கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் நுண் பொறுப்பாளா்கள் நியமனம் செய்யப்பட உள்ளனா். கூட்டணி தொடா்பாக பேசுவதற்கு எந்தத் தேவையும் எழவில்லை.

Advertisement

Advertisement

நாங்கள் ஏழு ஆண்டுகளாகத் தொடா்ந்து திமுக கூட்டணியில் இருந்து வருகிறோம். இந்தக் கூட்டணியை விட்டுவிட்டு இன்னொரு கூட்டணிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எதிா்வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் இண்டி கூட்டணியிலேயே விசிக தொடரும் என்றாா் அவா்.

அப்போது, திருச்சி கரூா் மண்டலச் செயலாளா் தமிழாதன், மாவட்டச் செயலாளா்கள் லாரன்ஸ், கனியமுதன், முசிறி வழக்குரைஞா் கலைவேந்தன், குருஅன்புசெல்வம், அரியலூா் மாவட்டச் செயலாளா் சிவா, நிா்வாகிகள் கதிா்வளவன், சேவை.மாறன், ஏ.எஸ்.ஆா். மதி, மாநில நிா்வாகி ஆசிரியா் செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.