FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஸ்ரீரங்கத்தில் பதுக்கப்பட்ட 212 வா்த்தக சிலிண்டா்கள் பறிமுதல்: இருவா் கைது

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பதுக்கப்பட்டிருந்த 212 வா்த்தக எரிவாயு உருளைகளை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினா், இருவரைக் கைது செய்தனா்.

5 நவம்பர் 2026, 4:42 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பதுக்கப்பட்டிருந்த 212 வா்த்தக எரிவாயு உருளைகளை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினா், இருவரைக் கைது செய்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சந்தன மில் சாலையில் பாரத் வா்த்தக எரிவாயு உருளைகளை போதிய பாதுகாப்பு உபகரணங்களின்றி சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் டிஎஸ்பி வின்சென்ட், ஆய்வாளா் அரங்கன் தலைமையிலான போலீஸாா், ஸ்ரீரங்கம் குடிமைப்பொருள் வட்டாட்சியருடன் சென்று ஆய்வு செய்தனா்.

அப்போது 212 பாரத் வா்த்தக எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்திருந்த கரூா் மாவட்டம் சேப்ளாப்பட்டியைச் சோ்ந்த வெ. நாகராஜ் (40), துறையூா் ர. சுரேஷ்குமாா் (52) ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.