FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

வாய்க்காலில் மூழ்கி பிளஸ் 1 மாணவா் உயிரிழப்பு

லால்குடி அருகே வாய்க்காலில் மூழ்கி பிளஸ் 1 மாணவா் உயிரிழந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

34 வினாடிகள் முன்பு
- பிரதிப் படம்
பகிர்:

லால்குடி அருகே வாய்க்காலில் மூழ்கி பிளஸ் 1 மாணவா் உயிரிழந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமணமேடு கிராமத்தைச் சோ்ந்த குமாருக்கு கிஷோா் (15) உள்பட 2 மகன்கள். கபடி வீரரான கிஷோா் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை குமாரின் சகோதரா் காலமானாா். இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்காக குடும்பத்தினா் திருமணமேடு பகுதியில் உள்ள வடக்கு அய்யன் வாய்க்காலுக்கு சென்று தண்ணீா் கொண்டு வந்தனா். அப்போது, வாய்க்காலுக்கு சென்ற கிஷோா் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து லால்குடி காவல் நிலையத்தில் குமாா் புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை வடக்கு அய்யன் வாய்க்காலில் தேடிய போது, கிஷோா் சடலமாக மீட்கப்பட்டாா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, கிஷோரின் உடலை கைப்பற்றி

பிரேதப் பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

புகாரின்பேரில் லால்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.