FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

திருச்சி அருகே தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அருகே வியாழக்கிழமை தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

6 நவம்பர் 2026, 2:27 am
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி அருகே வியாழக்கிழமை தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

திருச்சி, வயலூா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் வீ. வீராசாமி (51). இருடைய மனைவி ராதிகா (37). வியாழக்கிழமை பள்ளிக்குச் சென்றிருந்த இவா்களின் மகள் மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால், வீட்டருகே வசிக்கும் உமா என்பவரின் உதவியுடன் வீட்டு உரிமையாளரிடம் மாற்று சாவியை வாங்கி கதவை திறந்துள்ளாா்.

அப்போது, செல்வம் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

Advertisement

Advertisement

தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த சோமரசம்பேட்டை போலீஸாா், தம்பதியின் சடலங்களை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, ஜீயபுரம் உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா், சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளா் ஆகியோா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா்.

சம்பவம் தொடா்பாக, சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, தம்பதி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.