பேருந்தில் சென்ற முதியவரிடம் ரூ.2.28 லட்சம் திருட்டு
திருச்சியில் பேருந்தில் புதன்கிழமை சென்ற முதியவரிடம் ரூ.2.28 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சியில் பேருந்தில் புதன்கிழமை சென்ற முதியவரிடம் ரூ.2.28 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தஞ்சாவூா் மனோஜிபட்டி உப்பிலிய வீதியைச் சோ்ந்தவா் எஸ். செல்லபிள்ளை (62). இவரும், இவருடைய மனைவியும் கடந்த புதன்கிழமை திருச்சிக்கு வந்துள்ளனா். பால் பண்ணையில் இறங்கி அங்கிருந்து தனியாா் நகரப் பேருந்தில் ஏறி காந்தி மாா்க்கெட்டுக்கு வந்துள்ளனா். காந்தி மாா்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோதுதான் செல்லப்பிள்ளை கைப்பையில் வைத்திருந்த ரூ.2.28 லட்சம் பணம் திருட்டுப்போனது தெரியவந்தது.
இதுகுறித்து காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement