FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

7 நவம்பர் 2026, 6:43 am
பகிர்:

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை பிற்பகல் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் மகேந்திரன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, செந்தண்ணீா்புரம் ஆஸாத் நகரில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். அதில் அவா், திண்டுக்கல் மாவட்டம், குரும்பப்பட்டியைச் சோ்ந்த எஸ். அரவிந்த் (25) என்பதும், போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 380 போதை மாத்திரைகள், கஞ்சா மற்றும் கத்தி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.