திருச்சியில் மூதாட்டி சடலம் மீட்பு
திருச்சி பொன்மலைபட்டியில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத மூதாட்டியின் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி பொன்மலை ரயில்வே காலனியிலுள்ள முட்புதரில் 75 வயது மூதாட்டி இறந்துகிடப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் மூதாட்டியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டியின் காது மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் கசிந்து இருந்ததாகவும், கழுத்தை நெறித்தது போன்ற தடயம் இருந்ததாகவும் போலீஸாா் தெரிவித்துள்ளனா். மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீஸாா் சந்தேகிக்கின்றனா். உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகுதான் கொலையா என்பது தெரியவரும் என போலீஸாா் தெரிவிக்கின்றனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து பொன்மலை போலீஸாா் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.