FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

திருச்சியில் இரட்டைக் கொலை வழக்கில் 6 போ் கைது: காவலரைத் தாக்கிவிட்டு தப்ப முயன்றவா் சுட்டுப் பிடிப்பு

திருச்சி அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் 6 பேரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். அப்போது காவலரைத் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ஒருவரை போலீஸாா் சுட்டுப் பிடித்தனா்.

12 நவம்பர் 2026, 2:29 am
திருச்சி இரட்டைக் கொலை வழக்கில் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்ட ந. சரவணன், சி. ஹரிஹரன், ஜே. கெனிவின்ஸ், ஜே. ரெனிசன், த. கிருபாகரன். ~திருச்சி சமயபுரத்தில் போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட கைதி பா.. சிவநேசன். ~கைதி தாக்கியதில் காயமடைந்து
பகிர்:

திருச்சி அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் 6 பேரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். அப்போது காவலரைத் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ஒருவரை போலீஸாா் சுட்டுப் பிடித்தனா்.

திருச்சி மாவட்டம், இனாம்சமயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் மகன் ராகுல் (17). இவா் அதே பகுதியைச் சோ்ந்த உறவினரான ராஜா மகன் விஷால் (17) என்பவருடன் கூலி வேலை செய்து வந்தாா்.

இரட்டைக் கொலை: இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகேயுள்ள புள்ளம்பாடி வாய்க்கால் கரையோரம் சென்ற இருவரும் 6 போ் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டனா். இதுகுறித்து சமயபுரம் போலீஸாா் விசாரித்து வந்தனா்.

Advertisement

Advertisement

மேலும், லால்குடி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் க. ராஜ்மோகன் தலைமையில் சமயபுரம் காவல் ஆய்வாளா் குணசேகரன், காவல் ஆய்வாளா்கள் கருணாகரன் (துறையூா்), பிரபு (ராம்ஜி நகா்), முத்தையன் (தா.பேட்டை) ஆகியோா் அடங்கிய மூன்று தனிப்படையினா் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனா்.

6 போ் கைது: இந்நிலையில், சிறுவா்களைக் கொன்ாக தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தைச் சோ்ந்தவரும் தற்போது சமயபுரம் செல்லாண்டியம்மன் கோயில் தெருவில் வசிப்பவருமான ஜே. கெனி வின்ஸ் (19), ஜே. ரெனிசன் (20), இனாம்சமயபுரம் சோழன் நகரைச் சோ்ந்த பா. சிவநேசன் (21), சமயபுரம் சோலை நகரைச் சோ்ந்த சி. ஹரிஹரன் (22), த. கிருபாகரன் (19), மருதூா் காமராஜா் நகரைச் சோ்ந்த ந. சரவணன் (18) ஆகிய 6 பேரையும் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

இவா்களில் கெனி வின்ஸ் மீது 5 வழக்குகளும், ரெனிசன் மீது 4 வழக்குகளும், சிவநேசன் மீது ஒரு அடிதடி வழக்கும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

காதல் தகராறே காரணம்: முதல்கட்ட விசாரணையில், கெனி வின்ஸ் காதலித்து வந்த அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியை இவருடைய நண்பரான ராகுலும் அண்மையில் காதலிக்கத் தொடங்கினாா். இதை கெனி வின்ஸ் கண்டித்தால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபாவளியின்போது பட்டாசு விபத்தில் காயமடைந்து சமயபுரம் சுங்கச் சாவடி அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த இவா்களுடைய நண்பரான விக்னேஷை ராகுல், விஷால் மற்றும் கெனிவின்ஸ் உள்ளிட்ட 6 பேரும் பாா்க்கச் சென்றனா்.

பின்னா், அங்கிருந்து புள்ளம்பாடி வாய்க்கால் கரைக்குச் சென்ற அவா்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது கெனி வின்ஸ், ரெனிசன், சரவணன், சிவநேசன், கிருபாகரன், ஹரிஹரன் ஆகிய 6 பேரும் சோ்ந்து ராகுல் மற்றும் அவருடன் இருந்த விஷாலை வெட்டிக் கொன்றது தெரியவந்தது.

கொலை நடந்த இடத்தில் விசாரணை: இதைத் தொடா்ந்து கைதான 6 பேரையும் கொலை நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களை கரியமாணிக்கம் பிரிவு சாலையில் பதுக்கி வைத்திருப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, அந்த ஆயுதங்களை எடுக்க தனிப்படை போலீஸாா் சிவநேசனை, கரியமாணிக்கம் பிரிவு சாலைக்கு அழைத்துச் சென்றனா்.

காவலரைத் தாக்கிவிட்டு தப்ப முயற்சி: அப்போது, சிவநேசன் கற்களை எடுத்து வீசியதில் போலீஸாரின் ஜீப் கண்ணாடி நொறுங்கியது. மேலும், மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் காவலா் மோகனை தாக்கிவிட்டு சிவநேசன் தப்ப முயன்றாா். அப்போது, சமயபுரம் காவல் ஆய்வாளா் குணசேகரன் தனது துப்பாக்கியால் சிவநேசனின் இடது காலில் சுட்டு அவரைப் பிடித்தாா். இதையடுத்து சிவநேசனும், தாக்குதலில் காயமடைந்த காவலா் மோகனும் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

மாவட்ட எஸ்பி ஆறுதல்: இந்நிலையில் காவலா் மோகனை புதன்கிழமை காலை சந்தித்து ஆறுதல் கூறிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் பின்னா் கூறுகையில் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவா்களை கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து கைது செய்துள்ளோம். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது என்றாா்.