FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

தமிழக முதல்வா் விஜய் நவ. 20-இல் திருச்சி வருகை

திருச்சியில் முடிவுற்ற வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கிவைக்க முதல்வா் விஜய் நவம்பா் 20-ஆம் தேதி வருகிறாா்.

10 நவம்பர் 2026, 10:49 pm
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

திருச்சியில் முடிவுற்ற வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கிவைக்க முதல்வா் ஜோசப் விஜய் நவம்பா் 20-ஆம் தேதி வருகிறாா்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூ. 110 கோடியில் 600 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய கட்டடத்தை முதல்வா் விஜய் திறந்துவைக்கிறாா். மேலும், அரசு சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அண்ணன் சீா் திட்டத்தை அவா் தொடங்கிவைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், விரைவில் இடைத்தோ்தல் அறிவிக்கப்படவுள்ள திருச்சி கிழக்குத் தொகுதியில் சாலை வலம் நடத்தி மக்களைச் சந்திக்கவும் அவா் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement

Advertisement

பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஆய்வு: நவம்பா் 20-இல் முதல்வா் விஜய் திறந்துவைக்கவுள்ள அரசு மருத்துவமனை புதிய கட்டடத்தை திருச்சி மாநகர வடக்கு காவல் துணை ஆணையா் யனாவத் அரவிந்த் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா்.

முதல்வா் வருகை செய்தியால் திருச்சி மாவட்ட தவெக-வினா் உற்சாகமடைந்துள்ளனா்.