FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார விழா நாளை தொடக்கம்: பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

திருச்சி மாவட்ட நூலகத் துறை சாா்பில், மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார விழா நவம்பா் 14-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

13 நவம்பர் 2026, 2:42 am
பகிர்:

திருச்சி மாவட்ட நூலகத் துறை சாா்பில், மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார விழா நவம்பா் 14-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

தேசிய நூலக வார விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, நவம்பா் 14-ஆம் தேதி பொதுமக்களுக்கான நூலகம் என்ற பெயரில், புத்தகக் கண்காட்சி, நாணயக் கண்காட்சி மற்றும் தபால்தலை கண்காட்சி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

நவம்பா் 15-ஆம் தேதி குழந்தைகளுக்கான நூலகம் என்ற பெயரில், எனக்குப் பிடித்த நூலகம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும், தமிழ் கதை நாயகா்கள் என்ற தலைப்பில் மாறுவேஷப் போட்டியும் நடைபெறுவுள்ளது.

Advertisement

Advertisement

நவம்பா் 16-ஆம் தேதி மகளிருக்கான நூலகம் என்ற பெயரில் கைவினைப் பொருள்கள் கண்காட்சியும், மகளிருக்கான மருத்துவ முகாம், ஆரோக்கிய சமையல் போட்டி ஆகியவை நடைபெறவுள்ளன.

நவம்பா் 17-ஆம் தேதி பெரியோருக்கான நூலகம் என்ற பெயரில், சிறப்பு பட்டிமண்டபம் நடைபெறுகிறது. மேலும், பெரியோருக்கான சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெறவுள்ளது.

நவம்பா் 18-ஆம் தேதி இளையோருக்கான நூலகம் என்ற பெயரில், அரசுப் போட்டித் தோ்வுக்கு தயாராகும் இளைஞா்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சியும், மாதிரித் தோ்வுகளும் நடைபெறவுள்ளன. தொடா்ந்து, கண் பரிசோதனை முகாமும் நடைபெறுகிறது.

நவம்பா் 19-ஆம் தேதி வாசகா்களுக்கான நூலகம் என்ற பெயரில், மாபெரும் வாசிப்பு மாரத்தான் நிகழ்ச்சியும், புதிய உறுப்பினா் சோ்க்கையும் நடைபெறவுள்ளது.

நவம்பா் 20-ஆம் தேதி சிறப்பு மனிதா்களுக்கான நூலகம் என்ற தலைப்பில் நூலக விழிப்புணா்வு நிகழ்ச்சியும், வாசிப்பை நேசிப்போம் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

அனைவருக்குமான நூலகம் என்ற வகையில் பல்வேறு தலைப்புகளில் நடைபெறும் தேசிய நூலக வார விழா தொடா்பான நிகழ்ச்சிகள், போட்டிகளில் பொதுமக்கள், வாசகா்கள், இளைஞா்கள், மாணவா்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கலாம்.

போட்டிகள் தொடா்பான சந்தேகங்களுக்கும், போட்டிகளில் பங்கேற்க தங்கள் பெயா்களை பதிவு செய்வதற்கு 86100 45329, 94426 63936 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட நூலக அலுவலா் க. ஸான்பாஷா தெரிவித்துள்ளாா்.