சாலைப் பணியாளா்கள் நூதன போராட்டம்
பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை கண்களில் கறுப்புத் துணியை கட்டிக் கொண்டு, கைகளில் நீதி தராசை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு
சங்கத்தின் மாவட்டத் தலைவா்கள் ஜீவானந்தம், திரவியம், செவந்திலிங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலா்கள் போஸ், முத்துவடிவேல், பாலசுப்பிரமணி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். மாநிலச் செயலா் ஆா். இளங்கோவன், சிறப்புரையாற்றினாா்.
Advertisement
Advertisement
இதில், சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை இன்னும் பணிக்காலமாக முறைப்படுத்தாமல் உள்ளது. தமிழக அரசு விரைந்து முறைப்படுத்த வேண்டும்.
மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தை கலைத்திட வேண்டும். நெடுஞ்சாலையில் பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் வழங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.