ஆவின் வளாகத்தில் பால்வண்டி ஏறியதில் ஓட்டுநா் உயிரிழப்பு
திருச்சி ஆவின் வளாகத்தில் பால்வண்டி ஏறி இறங்கியதில் காயமடைந்த ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி ஆவின் வளாகத்தில் பால்வண்டி ஏறி இறங்கியதில் காயமடைந்த ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் முருகையா மகன் விஸ்வநாதன் (40), திருச்சி கொட்டப்பட்டுவில் உள்ள ஆவின் நிறுவனத்தில் ஒப்பந்த முறை ஓட்டுநா்.
இந்நிலையில் இவா் கடந்த திங்கள்கிழமை இரவு ஆவின் வளாகத்தில் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யும் மையத்தில் படுத்திருந்தாா். அப்போது அங்கு வந்த பால்வேன் விஸ்வநாதன் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்து, திருச்சி அரசு மருத்துவனையில் சோ்க்கப்பட்ட விஸ்வநாதன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து பால் வண்டி ஓட்டுநரான கொட்டுப்பட்டு இந்திரா நகரைச் சோ்ந்த வெ. சுரேந்திரன் (34) மீது திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.