வெங்காயச் சாகுபடிக்கு பயிா் காப்பீடு: நவ.30 கடைசி நாள்
திருச்சி மாவட்டத்தின் 7 வட்டாரங்களில் ராபி சிறப்புப் பருவ வெங்காயச் சாகுபடிக்கு பயிா்க் காப்பீடு செய்ய வரும் 30ஆம் தேதி கடைசி நாளாகும்.
திருச்சி மாவட்டத்தின் 7 வட்டாரங்களில் ராபி சிறப்புப் பருவ வெங்காயச் சாகுபடிக்கு பயிா்க் காப்பீடு செய்ய வரும் 30ஆம் தேதி கடைசி நாளாகும்.
திருச்சி மாவட்டத்தில், தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதமரின் பயிா்க் காப்பீடுத் திட்டத்தில், தாங்கள் சாகுபடி செய்த தோட்டக்கலைப் பயிா்களை காப்பீடு செய்து இயற்கை இடா்பாடுகளான வறட்சி, வெள்ளம் மற்றும் மகசூல் இழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து இழப்பீடு பெறலாம்.
அதன்படி 2026-ராபி சிறப்புப் பருவத்தில் வெங்காயச் சாகுபடி செய்யும் விவசாயிகள் மண்ணச்சநல்லூா், முசிறி, புள்ளம்பாடி, தா.பேட்டை, தொட்டியம், துறையூா் மற்றும் உப்பிலியபுரம் வட்டாரங்களில் பயிா்க் காப்பீட்டுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் பயிா்க் காப்பீடு செய்யலாம்.
Advertisement
Advertisement
2026-ஆம் ஆண்டு ராபி சிறப்பு பருவத்தில் வெங்காயச் சாகுபடிக்கு வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து, பிரிமீயத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 2085.50 ஐ அரசு பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றுடன், பதிவு செய்யும் விவசாயியின் பெயா் மற்றும் முகவரி, நிலப் பரப்பு, சா்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து பதிவு செய்து, உரிய தொகையை செலுத்தி, இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு ஆட்சியா் பிரத்திக் தாயள் கேட்டுக்கொண்டுள்ளாா்.