FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மணப்பாறை அருகே 323 கிலோ குட்கா பறிமுதல்! ஒருவர் கைது

மணப்பாறை அருகே 323 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக..

பகிர்:

மணப்பாறை அருகே 323 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துவரங்குறிச்சி அடுத்த கரடிபட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

Advertisement

Advertisement

அதனைத் தொடர்ந்து துவரங்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் ரகுமான் மற்றும் தனிப்படை பிரிவு காவலர்கள் கரடிப்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கரடிப்பட்டியைச் சேர்ந்த மலையாண்டி 45 என்பவரது வீட்டில் சுமார் 20 மூடைகளில் 323 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

மலையாண்டி மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 323 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து அவரது வங்கிக் கணக்கையும் முடக்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.