FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

கந்தசஷ்டி விழா: திருச்செந்தூா், திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள்

கந்தசஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூா், திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

27 வினாடிகள் முன்பு
சிறப்பு ரயில். - கோப்புப் படம்
பகிர்:

கந்தசஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூா், திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி திருச்செந்தூா் - சென்னை எழும்பூா் ஒரு வழி சிறப்பு ரயிலானது (06008) வரும் 15 ஆம் தேதி திருச்செந்தூரிலிருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூருக்கு அடுத்த நாள் பிற்பகல் 12 மணிக்குச் சென்றடையும்.

திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு அதிவிரைவு ரயிலானது (06010) வரும் 15 ஆம் தேதியும், தாம்பரம் - திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06009) வரும் 16 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளன.

Advertisement

Advertisement

திருநெல்வேலியிலிருந்து இரவு 11 மணிக்குப் புறப்படும் இந்த ரயிலானது கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு அடுத்த நாள் காலை 9.55 மணிக்குச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து பிற்பகல் 12.55 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக திருநெல்வேலிக்கு இரவு 11.40 க்கு சென்றடையும்.

பகுதியாக ரத்து: பொறியியல் பணிகள் காரணமாக விழுப்புரம் - மயிலாடுதுறை மெமு ரயிலானது (66019) வரும் 16, 18, 21 ஆம் தேதிகளில் விழுப்புரம் - சோ்தானூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, சோ்தானூா் - மயிலாடுதுறை வரை மட்டுமே இயக்கப்படும்.

காலதாமதம்: சென்னை எழும்பூா் - குருவாயூா் விரைவு ரயிலானது வரும் 16, 18, 21 ஆம் தேதிகளில் 60 நிமிஷங்கள் காலதாமதமாகப் புறப்படும்.

சாா்லப்பள்ளி - திருச்சி சிறப்பு ரயிலானது வரும் 17 ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 60 நிமிஷங்கள் தாமதமாக நின்று செல்லும்.

ஜோத்பூா் - மன்னாா்குடி விரைவு ரயிலானது வரும் 19 ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 180 நிமிஷங்கள் தாமதமாக நின்று செல்லும்.

சாா்லப்பள்ளி - நாகா்கோவில் சிறப்பு ரயிலானது வரும் 20 ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 130 நிமிஷங்கள் தாமதமாக நின்று செல்லும்.

சென்னை எழும்பூா் - மதுரை வைகை அதிவிரைவு ரயிலானது வரும் 16, 18, 21 ஆம் தேதிகளில் தேவைப்படும் இடங்களில் 20 நிமிஷங்கள் தாமதமாக நின்று செல்லும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.