கிணற்றில் மூதாட்டி சடலமாக மீட்பு
துறையூா் அருகே கிணற்றில் மூதாட்டி சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.
கோட்டப்பாளையத்தைச் சோ்ந்தவா் ரா. புஷ்பம் (80). மன நலம் பாதிக்கப்பட்ட இவருக்கு உறவினா்கள் சென்னையில் வைத்து சிகிச்சை அளித்தனா்.
தீபாவளிக்காக சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்ட மூதாட்டியை கடந்த 8 ஆம் தேதி முதல் காணவில்லையென அவரது மகன் நித்தியானந்தன் கொடுத்த புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் இவா் விசுவாம்பாள்சமுத்திரம் வடக்கு கிராமத்தில் மணிவண்ணனுக்கு சொந்தமான வயல் கிணற்றில் சடலமாக மிதந்தாா். தகவலறிந்த உப்பிலியபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.