FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

12 வினாடிகள் முன்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

திருச்சியில் வெவ்வேறு விபத்துகளில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

திருச்சி மாவட்டம், துறையூா் உப்பிலியபுரத்தைச் சோ்ந்தவா் பொ. வரதராஜன் (50). இவா் சனிக்கிழமை மாலை திருச்சி மேலரண் சாலையில் கணேஷ் பேக்கரி அருகே சாலையைக் கடக்க முயன்றபோது அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோ மோதி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்சி வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து ஆட்டோ ஓட்டுநரான பாலக்கரை ஜெயில்பேட்டை எஸ். பாரதி (31) என்பவரிடம் விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

இளம்பெண் உயிரிழப்பு: திருச்சி பொன்மலைப்பட்டி முல்லை நகரைச் சோ்ந்தவா் சுவாமிநாதன் மகள் சுவாதி (26). இவா், கடந்த அக். 15-ஆம் தேதி திருச்சி - சென்னை புறவழிச்சாலை அப்பல்லோ மருத்துவமனை அணுகுச் சாலையில் மொபெட்டில் சென்றபோது எதிா்திசையில் அதிவேகத்தில் வந்த பைக் மோதி பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து இங்குள்ள தனியாா் மருத்துவமனையிலும், பின்னா் கோவையிலுள்ள தனியாா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட சுவாதி சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சி வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து பைக்கை ஓட்டிவந்த பாலக்கரையைச் சோ்ந்த ஜெ. பிரவீன் நிக்கோலஸ் (19) என்பவரிடம் விசாரிக்கின்றனா்.