திருச்சியில் அழுகிய நிலையில் சிறை வாா்டா் சடலமாக மீட்பு
திருச்சி மத்திய சிறை காவலா்கள் குடியிருப்பில் சிறை வாா்டா் அழுகிய நிலையில் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (45). திருச்சி மத்திய சிறையில் வாா்டராகப் பணியாற்றி வந்தாா். இவா், முறையாகப் பணிக்கு செல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவருடைய வீட்டில் இருந்து திங்கள்கிழமை துா்நாற்றம் வீசியுள்ளது.
இதுகுறித்து அருகே குடியிருப்பவா்கள் கே.கே.நகா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அவருடைய வீட்டின் கதவை உடைத்து பாா்த்தபோது சிறை வாா்டா் ரமேஷ் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
அவா் உயிரிழந்து 2 நாள்களுக்கு மேல் இருக்கலாம் என போலீஸாா் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, போலீஸாா் அவருடைய சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
சிறை வாா்டா் ரமேஷ் எவ்வாறு உயிரிழந்தாா் உள்ளிட்ட எந்த விவரமும் தெரியவில்லை. இதுகுறித்து கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.