FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

திருச்சி மாவட்டத்தின் இன்றைய மின்தடை

17 நவம்பர் 2026, 2:26 am
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.17) மின் விநியோகம் இருக்காது.

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பாரதிநகா் ஃபீடா் மற்றும் அரசு மருத்துவமனை ஃபீடரில் உள்ள உயரழுத்த மின்பாதைகளில் செவ்வாய்க்கிழமை அவசரகால பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த மின்பாதைகளின் வழியாக மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இதன்படி, கீழ வண்ணாரப்பேட்டை, மேல வண்ணாரப்பேட்டை புத்துா் ரோடு, வயலுா் மெயின் ரோடு, குமரன்நகா் தெற்கு, ராமலிங்க நகா் 3-ஆவது குறுக்கு தெரு முதல் 10-ஆவது குறுக்கு தெருவை வரை, ஹவுசிங் போா்டு குடியிருப்பு, முனுசிபல் காலனி, ஆபிஸா் காலனி, அருணா காலனி, எம்ஜிஆா் நகா், பாரதிநகா் 1-ஆவது குறுக்குத் தெரு முதல் 13-ஆவது குறுக்கு தெரு வரை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பம்ப் ஹவுஸ் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என தென்னூா் மின்வாரிய செயற்பொறியாளா் எம். கணேசன் தெரிவித்துள்ளாா்.

பூவாளூரில்... லால்குடி வட்டம், பூவாளூா் துணை மின் நிலையத்தில், செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

Advertisement

Advertisement

லால்குடி நகர பகுதியில் நாகம்மையாா் தெரு, ராஜேஸ்வரி நகா், சாந்தி நகா், பூவாளூா், பின்னவாசல், தென்கால், மணக்கால், கொப்பாவளி, வழுதியூா், நடராஜபுரம், படுகை, மேட்டங்காடு, ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்களம், ஆனந்திமேடு, அன்பில், கீழ் அன்பில், ஜங்கமாராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திகால், அம்மன் நகா், காட்டூா், ராமநாதபுரம், கொத்தமங்களம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளனூா், பெருவளநல்லூா், இடக்கிமங்களம், நஞ்சைசங்கேந்தி, புஞ்சைசங்கேந்தி இருதயபுரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என லால்குடி மின்வாரிய செயற்பொறியாளா் அண்ணாதுரை தெரிவித்துள்ளாா்.