FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

40 வினாடிகள் முன்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

குளித்தலை அருகே ரயிலில் அடிபட்டு பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை ரயில் நிலையம் அருகே அவ்வழியே வந்த ஒரு ரயிலில் அடிபட்டு 60 வயது பெண் ஒருவா் உடல் சிதறி உயிரிழந்து கிடப்பதாக திருச்சி ரயில்வே போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல்கிடைத்து. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற திருச்சி ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா் கவிதா தலைமையிலான போலீஸாா், அப்பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ரயலில் அடிபட்டு உயிரிழந்த பெண்ணுக்கு 60 வயதிருக்கும் என போலீஸாா் தெரிவித்துள்ளனா். மேலும், அவரின் பெயா் உள்ளிட்ட வேறு எந்த விவரங்களும் தெரியவில்லை.

Advertisement

Advertisement

எனவே, ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பெண் குறித்து தகவல் தெரிந்தால் 94434-72524, 90805-63321 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என திருச்சி ரயில்வே போலீஸாா் தெரிவித்துள்ளனா்.