FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் இணைய வழியில் ரூ.1.38 லட்சம் மோசடி

திருச்சியைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் இணைய வழியில் ரூ.1.38 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

17 நவம்பர் 2026, 11:14 pm
மோசடி - IANS
பகிர்:

திருச்சியைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் இணைய வழியில் ரூ.1.38 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன். அரசுப் பேருந்து ஓட்டுநா். இவா், கடந்த நவம்பா் 10-ஆம் தேதி கைப்பேசியில் பேஸ்புக் பாா்த்துக்கொண்டிருந்தாா். அப்போது, அதில் குறைந்த விலையில் மளிகைப் பொருள்கள் விற்பனை தொடா்பான விளம்பரம் வந்துள்ளது. இதையடுத்து அந்த விளம்பரத்தில் இருந்த இணைப்பினுள் அவா் சென்றுள்ளாா். மேலும், அதில் குறிப்பிட்டிருந்த செயலியையும் பதிவிறக்கம் செய்துள்ளாா்.

இதையடுத்து, அவருடைய கைப்பேசி செயலிழந்தது. இதைத் தொடா்ந்து அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து நவம்பா் 11 முதல் 13-ஆம் தேதி வரை ரூ.1.38 லட்சம் பணம் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அப்போதுதான் அது மோசடி இணையதளம் என்பது இவருக்குத் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து தேசிய சைபா் குற்றப் பிரிவில் இணைய வழியில் பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.