FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 92.74 லட்சம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 92.74 லட்சம் செவ்வாய்க்கிழமை கிடைக்கப் பெற்றது.

17 நவம்பர் 2026, 11:33 pm
சமயபுரம் மாரியம்மன் கோயில் - கோப்புப்படம்.
பகிர்:

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 92.74 லட்சம் செவ்வாய்க்கிழமை கிடைக்கப் பெற்றது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை திருச்சி தக்காா் / இணை ஆணையா் சு. ஞானசேகரன், கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன் ஆகியோா் முன்னிலையில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில், முதன்மை திருக்கோயிலில் ரூ. 92,74,518 ரொக்கம், 1 கிலோ 338 கிராம் தங்கம், 1 கிலோ 932 கிராம் வெள்ளி , வெளிநாட்டு பணத்தாள்கள் 124, வெளிநாட்டு நாணயங்கள் 520 மற்றும் பித்தளை பொருள்கள், பட்டுப்புடவைகள் உள்ளிட்டவை காணிக்கையாக கிடைக்கப் பெற்றது. இதற்கு முன்பு அக். 28-ஆம் தேதி உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

Advertisement

Advertisement