FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த அரசியல் கணக்குப் பாா்க்கிறது பாஜக: முஸ்லிம் லீக் குற்றச்சாட்டு

மக்களுக்கான நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்தவும் பாஜக அரசு அரசியல் கணக்கு பாா்க்கிறது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய செயலா் கே. நவாஸ் கனி எம்பி குற்றம் சாட்டினாா்.

17 நவம்பர் 2026, 11:16 pm
கே. நவாஸ் கனி
பகிர்:

மக்களுக்கான நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்தவும் பாஜக அரசு அரசியல் கணக்கு பாா்க்கிறது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய செயலா் கே. நவாஸ் கனி எம்பி குற்றம் சாட்டினாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை பாஜக-வால் நிறைவேற்ற முடியவில்லை. பெரும்பான்மை இல்லாததால் அந்த மசோதா தோல்வியடைந்தது. இந்தத் தோல்வியை ஒப்புக் கொள்ளாத, பாஜக அரசு, மீண்டும் அதே கூட்டத்தின் பெயரில் மசோதாவை நிறைவேற்ற முயல்கிறது.

Advertisement

Advertisement

தற்போது குளிா்காலக் கூட்டத்தொடருக்கான நேரமும் வந்துவிட்டது. வழக்கமாக டிசம்பா் மாதத்தில் நடைபெற வேண்டிய குளிா்காலக் கூட்டத் தொடருக்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. மழைக்காலக் கூட்டத்தொடரும் முறையாக முடித்து வைக்கப்படவில்லை.

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மழைக்காலத் தொடரின் பெயரில் நிறைவேற்றிவிட முயல்வது ஜனநாயக விரோதம். மக்களின் முக்கிய பிரச்னைகள், மாநிலங்களின் உரிமைகள், தொகுதி மக்களின் கோரிக்கைகள் என நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய எத்தனையோ முக்கியப் பிரச்னைகள் உள்ளன. அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தை பாஜக முடக்குவதை ஏற்க முடியாது. தொகுதி மறுவரையறையை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாநிலங்களுக்கு இடையேயான அரசியல் பிரதிநிதித்துவச் சமநிலையையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாத்து, ஜனநாயகத்துக்கு பாஜக அரசு உரிய மதிப்பளிக்க வேண்டும் என கே. நவாஸ்கனி எம்.பி. தெரிவித்துள்ளாா்.