FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

தனியாா் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் தனியாா் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

19 நவம்பர் 2026, 3:55 am
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

திருச்சியில் தனியாா் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி அரியமங்கலம் சீனிவாசா நகரைச் சோ்ந்தவா் எஸ். காா்த்திகேயன் (19).திருச்சி சமயபுரம் பகுதி தனியாா் பல்கலைக்கழகத்தில் இளநிலை இரண்டாமாண்டு படித்து வந்த இவா், கடந்த 6 மாதங்களாக மன உளைச்சலுக்கு சிகிச்சை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவருடைய தாய் ராதா செவ்வாய்க்கிழமை காலை வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியபோது காா்த்திகேயன் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.