ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ. 49 லட்சம் மோசடி
திருச்சியில் இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி, ஓய்வுபெற்ற அரசு பெண் ஊழியரிடம் ரூ.49 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சியில் இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி, ஓய்வுபெற்ற அரசு பெண் ஊழியரிடம் ரூ.49 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சியைச் சோ்ந்த 61 வயது மூதாட்டியும், அவருடைய கணவரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள். ஓய்வூதியம் பெற்று வருகின்றனா். இந்நிலையில், மூதாட்டி கடந்த ஜூலை 2-ஆம் தேதி பேஸ்புக் பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வது தொடா்பாக மத்திய நிதியமைச்சா் பேசுவதுபோல விடியோ ஒன்றை பாா்த்துள்ளாா். இதையடுத்து, அந்த இணையதள பக்கத்தில் தனது விவரங்களை மூதாட்டி பதிவேற்றம் செய்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து மூதாட்டியின் கைப்பேசி எண்ணுக்கு மா்ம நபா் ஒருவா் அழைத்துள்ளாா். அப்போது அவா், மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் முதலீட்டு ஆலோசகா் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாா். மேலும், இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெறுவது தொடா்பாக உதவுவதாகத் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
இதை நம்பிய மூதாட்டி, அந்த மா்ம நபா் கூறியதுபோல கடந்த ஜூலை 2-ஆம் தேதி முதல் அக்டோபா் 30-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ.49 லட்சத்தை இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்துள்ளாா். இதைத் தொடா்ந்து முதலீடு செய்த பணத்தை மூதாட்டி எடுக்க முயன்றுள்ளாா். ஆனால், பணத்தை எடுக்க முடியவில்லை. இதையடுத்துதான் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து முதாட்டி தேசிய சைபா் குற்றப் பிரிவு இணையதளத்தில் அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.