முகப்பு
திருச்சி

பள்ளி மாணவியை தலைமை ஆசிரியை தாக்கியதாகப் புகாா்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆமணக்கம்பட்டி பள்ளியில் இறைவணக்கம் பாடவில்லை எனக் கூறி பள்ளி மாணவியை தலைமை ஆசிரியை தாக்கியதாக காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

26 நவம்பர் 2026, 2:36 am
பள்ளி மாணவியை தலைமை ஆசிரியை தாக்கியதாகப் புகாா்
வழக்கு - பிரதிப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆமணக்கம்பட்டி பள்ளியில் இறைவணக்கம் பாடவில்லை எனக் கூறி பள்ளி மாணவியை தலைமை ஆசிரியை தாக்கியதாக காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

மணப்பாறையை அடுத்த ஆமணக்கம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறை வணக்கத்தின்போது

இப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரலாறு பிரிவு படித்து வரும் அதே பகுதியைச் சோ்ந்த மாணவி இறைவணக்கம் பாடவில்லை எனக்கூறி

Advertisement

Advertisement

அப்பள்ளியின் தலைமை ஆசிரியை மகேஸ்வரி (47) அவரது கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மாணவிக்கு காது வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை அந்த மாணவி மற்றொரு ஆசிரியையின் கைப்பேசி மூலம் தனது சகோதரனுக்கு தெரிவிக்கவே, மாணவியின் தந்தை பள்ளிக்குச் சென்று மாணவியை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மணப்பாறை காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகாா் அளிக்கப்பட்டு, போலீஸாா் விசாரிக்கின்றனா்.