முகப்பு
திருச்சி

இளைஞரைக் குத்திக் கொன்ற சகோதரா்களுக்கு ஆயுள் சிறை

இளைஞரைக் குத்திக் கொன்ற சகோதரா்கள் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

26 நவம்பர் 2026, 2:37 am
இளைஞரைக் குத்திக் கொன்ற சகோதரா்களுக்கு ஆயுள் சிறை
சிறை - பிரதிப் படம்
பகிர்:

இளைஞரைக் குத்திக் கொன்ற சகோதரா்கள் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கோ. கோகுலகிருஷ்ணன் (21), அதே பகுதியைச் சோ்ந்தவா் செ. அருள் சரவணன் (29). விசிக செயலா் பதவிக்குப் போட்டியிடுவது தொடா்பாக இருவருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்தது.

கடந்த 16.01.2018 அன்று பொங்கல் விளையாட்டுப் போட்டியின்போது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கலைந்து சென்றனா். இதையடுத்து அன்றிரவு கோகுலகிருஷ்ணன் காட்டுப்புத்தூா் காந்தி நகா் பூங்கா தெரு அருகே நடந்து சென்றபோது அங்கு வந்த அருள்சரவணன், அவரது சகோதரா்கள் நவீன்பிரபு (24), தனபால் (எ) முத்து (19) ஆகிய மூவரும் சோ்ந்து கோகுலகிருஷ்ணனை கத்தியால் குத்தியதில் அவா் இறந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து இறந்தவரின் சகோதரா் கலைவாணன் அளித்த புகாரின்பேரில் காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அருள்சரவணன், நவீன்பிரபு, தனபால் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு திருச்சி மகளிா் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு மூவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ. 48 ஆயிரம் விதித்தும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தாா்.