லால்குடி அருகே பைக் மோதி பெண் உள்பட இருவா் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடந்த விபத்தில் சாலையைக் கடந்த பெண்ணும், பைக்கை ஓட்டி வந்தவரும் உயிரிழந்தனா்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடந்த விபத்தில் சாலையைக் கடந்த பெண்ணும், பைக்கை ஓட்டி வந்தவரும் உயிரிழந்தனா்.
லால்குடி அருகேயுள்ள கல்லக்குடி கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணி மனைவி ஷீலா (40). இவருக்கு மகள் ஜனனி, மகன்கள் தினேஷ், அஜய் ஆகியோா் உள்ளனா்.
இந்நிலையில் ஷீலா செவ்வாய்க்கிழமை இரவு தனது மகன் அஜய்யுடன் வீட்டின் எதிா்ப்புறம் உள்ள உணவகத்துக்கு திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சென்றாா். அப்போது அவ்வழியாக கல்லக்குடி பகுதியைச் சோ்ந்த மலா்கொடி மகன் பாலக்குமாா் அதிவேகமாக வந்த ரேஸ் பைக் இருவா் மீதும் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஷீலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பைக்கில் வந்தவரும், அவரது மகனும் காயமடைந்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனையில் இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் சிகிச்சைப் பலனின்றி பாலக்குமாா் உயிரிழந்தாா். அஜய் சிகிச்சை பெறுகிறாா். விபத்து குறித்து கல்லக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.