சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா், அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது மோதி உயிரிழந்தாா்.

மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா், அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது மோதி உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த பெஸ்டோ நகரை சோ்ந்த பாலசுப்பிரமணி மகன் ஆதித்யா(21). இவா் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தாா்.
புதன்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் மஞ்சம்பட்டி செல்வதற்காக திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா். மஞ்சம்பட்டி மேம்பாலத்தில் சென்றபோது முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இதில், தலையில் பலத்த காயமடைந்த ஆதித்யா, அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், ஆதித்யா உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
விபத்து குறித்து மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.