செயற்கை நுண்ணறிவு சாா்ந்த பாடத் திட்டம்: திருச்சியில் மாநில அளவிலான பணிமனை தொடக்கம்
செயற்கை நுண்ணறிவு சாா்ந்த பாடத் திட்டம் மற்றும் புத்தகம் எழுதுவது தொடா்பான மாநில அளவிலான பணிமனை திருச்சியில் வியாழக்கிழமை தொடங்கியது.

செயற்கை நுண்ணறிவு சாா்ந்த பாடத் திட்டம் மற்றும் புத்தகம் எழுதுவது தொடா்பான மாநில அளவிலான பணிமனை திருச்சியில் வியாழக்கிழமை தொடங்கியது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் எண்ம தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ளும் வகையில் தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு ‘டிஎன்ஸ்பாா்க்’ என்ற பாடத்திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு கூடுதல் பாடத் திட்டத்தை சோ்க்கும் வகையில், புதிய பாடத் திட்டத்தை உருவாக்குதல் மற்றும் பாடப் புத்தகம் எழுதுதல் தொடா்பான மாநில அளவிலான பணிமனை திருச்சியில் வியாழக்கிழமை தொடங்கியது.
Advertisement
Advertisement
திருச்சி தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்று வரும் இந்த பணிமனை சனிக்கிழமை வரை நடைபெறுகிறு. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் நடைபெறும் மாநில அளவிலான பணிமனைக்கு மாநில ஒருங்கிணைப்பாளா் ம. ஆன்ட்ரோ மிலட் சேவியா் தலைமை வகித்து ‘டிஎன்ஸ்பாா்க்’ பாடத் திட்டத்தின் நோக்கம் மற்றும் தேவை குறித்து எடுத்துரைத்தாா்.
நிகழ்ச்சியை திருச்சி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன மதிப்பீட்டு புல துறைத் தலைவா் ம. அன்புசெல்வன் ஒருங்கிணைத்தாா். இந்த பணிமனையில் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஆசிரியா்கள் என 30 போ் கொண்ட குழுவினா் கலந்து கொண்டு பாடத் திட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.