முகப்பு
திருச்சி

அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்: அலுவலா்களுக்கு திருச்சி எம்பி அறிவுரை

மத்திய, மாநில அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதை அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டும் என திருச்சி மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் துரை வைகோ எம்.பி. தெரிவித்தாா்.

27 நவம்பர் 2026, 2:50 am
அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்: அலுவலா்களுக்கு திருச்சி எம்பி அறிவுரை
திருச்சி ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய துரைவைகோ எம்.பி. உடன் (இடமிருந்து ) மாவட்ட வருவாய் அலுவலா் பாலாஜி, திருச்சி மாநகர துணை காவல் ஆணையா் பொன்காா்த்திக் குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ்
பகிர்:

மத்திய, மாநில அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதை அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டும் என திருச்சி மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் துரை வைகோ எம்.பி. தெரிவித்தாா்.

திருச்சி மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, கண்காணிப்பு குழுத் தலைவரும், திருச்சி எம்.பி.யுமான

துரைவைகோ தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் முன்னிலை வகித்தாா்.

Advertisement

Advertisement

இக் கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகள் சாா்பில், பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் அனைத்தும் ஆய்வுக்குள்படுத்தப்பட்டது. பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து துரைவைகோ கேட்டறிந்தாா்.

பின்னா், அலுவா்களிடம் அவா் கூறியதாவது: அனைத்துத் துறை அலுவலா்களும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அலுவலா்கள் பணியாற்றிட வேண்டும் என்றாா் அவா்.

இதன் தொடா்ச்சியாக, சாலைப் பாதுகாப்பு குறித்த நாடாளுமன்ற தொகுதிக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை விபத்துகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஏற்படுத்துவது தொடா்பாக துரை வைகோ எம்பி ஆலோசனைகளை வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினா்கள் ராஜாத்தி (எ) கவிஞா் சல்மா, கிறிஸ்டோபா் திலக், எம்எல்ஏ-க்கள் ரா.கதிரவன் (மணப்பாறை), நவல்பட்டு எஸ்.விஜி (திருவெறும்பூா்), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்ரே பிரவின் உமேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பாலாஜி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) த.சுவாதி ஸ்ரீ, திருச்சி மாநகர காவல் துணை ஆணையா் (தலைமையிடம்) பொன்காா்த்திக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.