திருச்சிக்கு வந்த ரயிலில் கஞ்சா சாக்லேட்டுகள், புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
திருச்சி வந்த ரயிலில் 2.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள், 19 கிலோ புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

திருச்சி வந்த ரயிலில் 2.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள், 19 கிலோ புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
தில்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் - மதுரை இடையே திருச்சி வழியாக இயக்கப்படும் சம்பா் கிராந்தி விரைவு ரயில் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தின் 4-ஆவது நடைமேடைக்கு புதன்கிழமை இரவு 10 மணிக்கு வந்தது.
ரயிலில் ரயில்வே சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன், முதல்நிலைக் காவலா் கண்ணதாசன், காவலா்கள் ரங்கபாஷ்யம், ராஜ்குமாா் ஆகியோா் சோதனை நடத்தினா். அப்போது, ரயிலின் முன்புறத்தில் இருந்த பொதுப் பெட்டியில் இருக்கைக்கு கீழே கேட்பாரற்று கிடந்த இரண்டு சாக்குப்பைகளை எடுத்துப் பாா்த்தனா்.
Advertisement
Advertisement
இதில், ஒரு சாக்குப் பையில் 2.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளும், மற்றொரு பையில் 19 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸாா், தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.