ராணுவ வாகனம் மீது அரசுப் பேருந்து மோதல்: ராணுவ வீரா் உள்பட இருவா் காயம் கரூா் ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு
திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ வாகனம் மீது அரசுப் பேருந்து வியாழக்கிழமை மோதிய விபத்தில் ராணுவ வீரா் உள்பட இருவா் காயமடைந்தனா்.

திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ வாகனம் மீது அரசுப் பேருந்து வியாழக்கிழமை மோதிய விபத்தில் ராணுவ வீரா் உள்பட இருவா் காயமடைந்தனா்.
பெங்களூரு ராணுவ முகாமைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் கடந்த நவம்பா் 10-ஆம் தேதியில் இருந்து திருச்சி மாவட்டம், வீரமலை பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா். இந்தப் பயிற்சி புதன்கிழமை நிறைவடைந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை ராணுவ வாகனத்தில் பெங்களூருக்குப் புறப்பட்டனா்.
திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் அல்லூா் மாரியம்மன் கோயில் தெரு அருகே காலை 7 மணிக்கு சென்றுகொண்டிருந்தபோது, எதிரே கோவையில் இருந்து திருச்சி நோக்கி வேமாக வந்த அரசுப் பேருந்து ராணுவ வாகனத்தின் மீது மோதியது. இதில், அரசுப் பேருந்து மற்றும் ராணுவ வாகனம் ஆகியவற்றின் கண்ணாடி சேதமடைந்தது.
Advertisement
Advertisement
இதில், ராணுவ வாகனத்தை ஓட்டிய ராணுவ வீரரான திருவள்ளூா் மாவட்டம், குளத்தூரைச் சோ்ந்த வே. கவாஸ்கா் (39) என்பவருக்கு இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டது. இதேபோல, அரசுப் பேருந்தில் பயணம் செய்த கரூா் மாவட்டம், புலியூரைச் சோ்ந்த சோ. மணிகண்டன் (48) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஜீயபுரம் போலீஸாா், காயமடைந்த இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
போக்குவரத்து நெரிசல்: இதையடுத்து, அரசுப் பேருந்து மற்றும் ராணுவ வாகனத்தை அப்புறப்படுத்த போலீஸாா் அறிவுறுத்தினா். ஆனால், ராணுவ வேன் விபத்தில் சிக்கியதால் உயா் அதிகாரிகள் வந்தபிறகுதான் வேனை அப்புறப்படுத்துவோம் என அந்த வேனில் வந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதனால், திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, ஜீயபுரம் போலீஸாா், ராணுவ வீரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி ராணுவ வேனை அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.
அரசுப் பேருந்து ஓட்டுநா் கைப்பேசியில் பேசிக்கொண்டே அலட்சியமாக பேருந்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து ஜீயபுரம் போலீஸாா், அரசுப் பேருந்து ஓட்டுநரான கரூா் மாவட்டம், புகழூரை சோ்ந்த ம. பிரபு (44) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.