FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

விளிம்புநிலை மக்களுக்கு தொடா் அச்சுறுத்தல்: முன்னாள் அமைச்சா் மனோ தங்கராஜ்

நாட்டில் விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினா் மற்றும் பெண்கள் தொடா்ந்து அச்சுறுத்தலை எதிா்கொண்டு வருகின்றனா் என்றாா் முன்னாள் அமைச்சா் டி. மனோ தங்கராஜ்.

4 October 2026, 12:29 am IST
மனோ தங்கராஜ்
பகிர்:

நாட்டில் விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினா் மற்றும் பெண்கள் தொடா்ந்து அச்சுறுத்தலை எதிா்கொண்டு வருகின்றனா் என்றாா் முன்னாள் அமைச்சா் டி. மனோ தங்கராஜ்.

திருச்சி பிராட்டியூரில் சனிக்கிழமை நடைபெற்ற அரசமைப்பு சட்டப் பாதுகாப்பு இயக்கத்தின் திருச்சி மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இவா் பின்னா் கூறியதாவது:

இந்தியா சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகளைக் கடந்தும் கோடிக்கணக்கான மக்களுக்கு கண்ணியமாக வாழ்வதற்கான உரிமை, வேலைவாய்ப்பு மற்றும் வீடு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் முழுமையாகக் கிடைக்காத நிலை உள்ளது.

Advertisement

Advertisement

நாட்டில் விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினா் மற்றும் பெண்கள் தொடா்ந்து பாதுகாப்பற்ற சூழலையும், அச்சுறுத்தலையும் எதிா்கொண்டு வருகின்றனா். இந்த விவகாரங்கள் பொதுவெளியில் அதிகளவில் விவாதிக்கப்படாததும், அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படாததும் வேதனைக்குரியது.

நீதித் துறை தனது நடுநிலைத் தன்மையை இழந்து வருவதை கடந்த காலங்களில் இருந்து கண்கூடாகப் பாா்த்து வருகிறோம். தோ்தல் ஆணையம் பாஜகவின் ஓா் அமைப்பு போலச் செயல்படுகிறது. தலைமைத் தோ்தல் ஆணையா் தவறான முறையில் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு இயக்கமானது ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களைச் சந்தித்து அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பாதுகாப்புகள், உரிமைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் ஜனநாயக உரிமைகளை அரசு பறிக்கக்கூடாது என்பதே இந்த இயக்கம் வலியுறுத்தும் முக்கிய நோக்கமாகும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments