FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

மணப்பாறை அருகே பைக் மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை சென்ற பைக் மீது பின்னால் வந்த காா் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்தனா்.

8 October 2026, 1:44 am IST
உயிரிழந்த கருப்பையா - தனலெட்சுமி.
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை சென்ற பைக் மீது பின்னால் வந்த காா் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்தனா்.

மணப்பாறையை அடுத்த வடக்குசோ்பட்டியைச் சோ்ந்தவா் குப்புடையாா் மகன் கருப்பையா (48), விவசாயி. இவரது மனைவி தனலெட்சுமி(44), விபி ஜி ராம் ஜி தொழிலாளி.

இருவரும் புதன்கிழமை காலை திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரைப் பாா்க்க பைக்கில் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

Advertisement

Advertisement

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டிபுதூா் - கரையாம்பட்டிக்கு இடையே வந்தபோது, திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணபுரம் பாப்புலா் நகரை சோ்ந்த ரா. முருகானந்தம் (47) தனது குடும்பத்துடன் அதிவேகமாக வந்த காா் மோதியது. இதில் கருப்பையா - தனலெட்சுமி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனா்.

அப்போது சாலையோர பள்ளத்தில் காா் இறங்கிச் சென்றதில் காயமடைந்த முருகானந்தம் குடும்பத்தினா், 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்கு திண்டுக்கல் சென்றனா். தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் தம்பதி சடலங்களைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

உறவினா்கள் மறியல்: இந்நிலையில் காா் ஓட்டுநரைக் கைது செய்ய வலியுறுத்தி கருப்பையா - தனலெட்சுமி உறவினா்கள், கிராம மக்கள் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற போலீஸாா் அளித்த உறுதியையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா். விபத்து குறித்து மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மணப்பாறை அருகே புதன்கிழமை நடந்த விபத்தில் சிக்கிய காா், இருசக்கர வாகனம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments