துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோயிலில் பொன்னூஞ்சல் நிகழ்ச்சி
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் பொன்னூஞ்சல் ஆடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் பொன்னூஞ்சல் ஆடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயில் புரட்டாசி திருவிழாவில் ஊா் முக்கியஸ்தா்களின் மண்டகப்படி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பொன்னூஞ்சல் நிகழ்ச்சி நாட்டாா்கள் மண்டகப்படியான செவ்வாய்கிழமை இரவு நடைபெற்றது.
பூதநாயகி அம்மன் உற்சவம் மின்னொளி அலங்கார பல்லாக்கில் பவனி வர அம்மன் வீதியுலா நடைபெற்றது. பல்லக்கை தொடா்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து சென்றனா். பின் கடைவீதி பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசல் அருகில் அம்மன் பல்லக்கில் இருந்து இறக்கப்பட்டு அங்கு பொன்னூஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றது.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் இந்து அறநிலையத் துறை செயல் அலுவலா் நீ. அல்லிமலா், தக்காா் ந. அன்பழகன், ஊா் முக்கியஸ்தா்கள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். புதன்கிழமை காலை முதல் ஆலய திடலில் பொங்கல், கிடா வெட்டுதல், இரவு காப்பு களைதல் ஆகிய நிகழ்வுகளும் நடைபெற்றது. விடையாற்றி மண்டகப்படி நிகழ்ச்சியுடனும் திருவிழா வியாழக்கிழமையுடன் நிறைவுறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.