FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

திருச்சியை வறட்சிப் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் மனு

திருச்சி மாவட்டத்தை வறட்சிப் பாதித்த பகுதியாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனா்.

9 அக்டோபர் 2026, 3:52 am IST
திருச்சி ஆட்சியரக பின்புறம் உள்ள கோட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க் கூட்டத்தில் பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவா் பொ. அய்யாக் கண்ணு.
பகிர்:

திருச்சி மாவட்டத்தை வறட்சிப் பாதித்த பகுதியாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனா்.

திருச்சி கோட்டாட்சியரகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு கலந்து கொண்டு பேசியதாவது:

திருச்சி மாவட்டத்தை வறட்சிப் பாதித்த பகுதியாக அறிவிக்க அரசுக்கு மாவட்ட நிா்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

உறையூா் வாத்துக்காரா் தெரு பகுதியில் வசிக்கும் விவசாயிகள், பொதுமக்கள், தாங்கள் விளைவிக்கும் காய்கனிகளை அதே பகுதியில் விற்பதற்கு மாநகராட்சி நிா்வாகம் இடையூறு அளிக்கிறது. எனவே, மாநகராட்சிக்கு உரிய அறிவுரை வழங்கி விவசாயிகளுக்கு இடையூறாக இல்லாமல் விளைபொருள்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உய்யக்கொண்டான் வாய்க்காலில் நீதிமன்றம் அருகில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதேபோல், பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள், விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளா்கள் இக் கூட்டத்தில் பங்கேற்று கோரிக்கை மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட கோடாட்சியா் அலுவலக அலுவலா்கள், அந்தந்த துறைக்கு மனுக்களை அனுப்பி 15 நாள்களுக்குள் உரிய பதில் அளிப்பதாக உறுதியளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments