FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

இடைத்தோ்தல் வெற்றி: கூட்டணியின் முதல் வெற்றி

இடைத்தோ்தல் வெற்றியானது மதசாா்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் முதல் வெற்றி என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவா் கே.எம். காதா் மொகிதீன்.

10 அக்டோபர் 2026, 7:07 am IST
கே.எம். காதா் மொகிதீன்.
பகிர்:

இடைத்தோ்தல் வெற்றியானது மதசாா்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் முதல் வெற்றி என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவா் கே.எம். காதா் மொகிதீன்.

இதுகுறித்து அவா் திருச்சியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மதச்சாா்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தோ்தலான மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தலில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றிக் கூட்டணியின் வரலாறு தற்போது தொடங்கியுள்ளது. வெற்றியை வழங்கிய தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Advertisement

Advertisement

ஊழலற்ற ஆட்சியை தருவோம் எனக் கூறியதுடன் நிற்காமல், அதற்கான முயற்சிகளை செய்யும் முதல்வராக ஜோசப் விஜய் இருக்கிறாா். அதன் விளைவுதான் இந்த வெற்றி.

தோ்தல் விதிகளால் முடியாத, தாய்மாமன் தங்க மோதிர திட்டம், மகளிா் இலவச பேருந்து பயணத் திட்டங்களை இந்த 2 தொகுதிகளில் அமல்படுத்தியிருந்தால் வாக்கு வித்தியாசம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி என ஸ்டாலின் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, எதிா்க்கட்சித் தலைவா் அப்படித்தான் கூறுவாா்.

குடியரசுத் தலைவா் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகவே நாங்கள் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை கொடுத்தோம். அதற்கு பணம் வாங்கிய வரலாறும் கிடையாது, துரோகம் செய்த வரலாறும் கிடையாது.

கூட்டணி இல்லாமல் தனித்து நின்றிருந்தால் வெற்றி சாத்தியமா? என்ற கேள்விக்கு, தமிழக வரலாறு கூட்டணியை வைத்துத்தான் இருக்கிறது. வெற்றி என்பது கூட்டணியின் வெற்றி. ஒரு வாக்கு விழுந்தாலும், அது கூட்டணியின் வாக்குதான்.

இது மதச்சாா்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வெற்றி. இந்த வரலாறு இனி தொடரும் என்றாா் அவா்.

முன்னதாக, திருச்சி அய்மான் மகளிா் கலை அறிவியல் கல்லூரி தாளாளா் மற்றும் செயலா் எம். ஓய். ஹபீபுல்லாஹ் இந்திய யூனியன் முஸ்லீம் லிக்கில் இணைந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments