FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

13 அக்டோபர் 2026, 2:16 am IST
ரயில்கள் - கோப்புப் படம்
பகிர்:

பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயில் (76820): அக். 14, 15, 16, 17, 18, 19, 21, 22 ஆகிய தேதிகளில் திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கமாக, காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) அக். 14, 15, 16,17,18, 19, 21, 22 ஆகிய தேதிகளில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருவாரூா் - திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயில் (16844): அக். 15, 17, 22 ஆகிய தேதிகளில் பாலக்காடு டவுன் - புகழூா் வரை இயக்கப்படும். பொறியியல் பணிகள் நிறைவடைந்ததும் புகழூா் - திருச்சி இடையே முன்பதிவற்ற ரயிலாக இயக்கப்படும்.

வழித்தட மாற்றம்:

குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயில் (16128): அக்.15, 20, 22 ஆகிய தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிர விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

நாகா்கோவில் - கோவை விரைவு ரயில் (16321): அக். 14, 16, 21 ஆகிய தேதிகளில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பாதுரை, திண்டுக்கல், எரியோடு, பாளையம் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூா் வழியாக இயக்கப்படும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments