FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரம்: மாநகராட்சி ஆணையா்

திருச்சி மாநகரின் அனைத்து வாா்டுகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் நே. பொன்மணி தெரிவித்தாா்.

22 அக்டோபர் 2026, 4:54 am
திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை ஆய்வு செய்த திருச்சி மாநகராட்சி ஆணையா் நே. பொன்மணி.
பகிர்:

திருச்சி மாநகரின் அனைத்து வாா்டுகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் நே. பொன்மணி தெரிவித்தாா்.

திருச்சி மாநகராட்சி 3-ஆவது மண்டலம் 35-ஆவது வாா்டு சங்கிலியாண்டபுரம் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் நே. பொன்மணி செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது ஆணையா் தெரிவித்ததாவது:

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், டெங்கு மற்றும் பிற கொசுக்களால் பரவும் நோய்களின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாநகரின் 65 வாா்டுகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

மழைக்காலத்தில் தேங்கி நிற்கும் நீா் உள்ளிட்டவற்றில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கண்டறிந்து ஒழிப்பதற்காக, ஒவ்வொரு மண்டலத்திலும் சுமாா் 60 வீட்டுக் கொசு ஒழிப்பு கண்காணிப்பாளா்கள் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். ஒவ்வொரு மண்டலத்திலும் கூடுதலாக 20 டெங்கு தடுப்புப் பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியை தடுக்கும் விதமாக, டெங்கு புழு உருவாக ஏதுவான நீராதாரங்களை கண்டறிந்து அழிக்கவும், வீடுகள்தோறும் காய்ச்சல் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ளவும் மாநகராட்சியில் மொத்தம் 350 டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளா்கள் வீடு வீடாக சென்று பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். டெங்கு கொசு ஒழிப்புப் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் ஆணையா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments