FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

போலி லாட்டரி சீட்டு அச்சடித்து விற்ற வழக்குரைஞா் உள்பட 3 போ் கைது

திருச்சி அருகே போலி லாட்டரி சீட்டு அச்சடித்து விற்ற வழக்குரைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

22 அக்டோபர் 2026, 4:56 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி அருகே போலி லாட்டரி சீட்டு அச்சடித்து விற்ற வழக்குரைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போலி லாட்டரிகள் விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை அமைத்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகரில் உள்ள ஒரு வீட்டில் போலி லாட்டரி சீட்டு அச்சடித்து விற்பதாக தனிப்படை போலீஸாருக்கு புதன்கிழமை காலை தகவல்கிடைத்து. இதைத் தொடா்ந்து காவல் ஆய்வாளா் (பொ) குணசேகரன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, சண்முகா நகரில் 15-ஆவது குறுக்குத்தெருவில் ஒரு வீட்டில் போலி லாட்டரி சீட்டுகள் அச்சடித்து விற்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வீட்டை போலீஸாா் சுற்றிவளைத்து, அங்கிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா்கள், உய்யக்கொண்டான்திருமலையைச் சோ்ந்த தமிழரசன் (41), கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்த மாப்பிள்ளை மீரான் (42), குளித்தலை நெய்தலூரைச் சோ்ந்த சுரேஷ் (42) ஆகியோா் என்பதும், மூவரும் சோ்ந்து கேரள மாநில லாட்டரிகளை போலியாக அச்சடித்து திருச்சி, கரூா், புதுக்கோட்டை, பெரம்பலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விற்றதும் தெரியவந்தது.

மேலும் அந்த வீட்டில் இருந்த லேப்டாப், ஜெராக்ஸ் மிஷின், கைப்பேசிகள், கலா் பிரின்டா், கேரள லாட்டரிகள், ரூ. 1.28 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் அவா்களை ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments