இனிப்பக உரிமையாளரிடம் ரூ.1.90 கோடி மோசடி! 6 போ் மீது வழக்கு!
திருச்சியில் புதிய தொழில் தொடங்கலாம் எனக் கூறி இனிப்பக உரிமையாளரிடம் ரூ.1.90 கோடி மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி இபி ரோடு திப்பிரான்தொட்டி வீதியைச் சோ்ந்த முருகேசன் (43) அதே பகுதி வேதாத்திரி நகரில் இனிப்பகம் நடத்தி வருகிறாா். மேலும், ஆட்டோமொபைல்ஸ் உதிரி பாகங்கள் விற்பனை நிறுவனமும் நடத்தி வருகிறாா்.
இந்நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு இவருக்கு பழக்கமான அருண் என்பவா் பிரதீப்குமாா், தீபிகா, பிரசாந்தினி மற்றும் பிரதிஷ்குமாா் ஆகியோரை முருகேசனிடம் அறிமுகம் செய்தாா்.
Advertisement
Advertisement
அப்போது அருண் நாங்கள் அனைவரும் சுரேஷ் என்பவருடன் இணைந்து பல தொழில்கள் செய்வதாகவும், தற்போது தொடங்கியுள்ள புதிய நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் எனவும் முருகேசனிடம் தெரிவித்தாா்.
இதை நம்பிய முருகேசனும் கடந்த 2020 அக். 19 தொடங்கி 2022 ஜனவரி 10 வரை பல தவணைகளில் அருணின் வங்கிக் கணக்குக்கு ரூ. 2.20 கோடி அனுப்பினாா். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட அருண் புதிய தொழிலில் இருந்து எந்த லாபத்தையும் வழங்காமல் இருந்தாா்.
இதையடுத்து தான் கொடுத்த பணத்தை முருகேசன் திருப்பிக்கேட்கவே, ரூ.30 லட்சத்தை மட்டும் அருண் திருப்பிக் கொடுத்து, மீதிப் பணத்துக்கு காசோலையை கொடுத்தாா். ஆனால் அந்தக் காசோலை பணமில்லாமல் திரும்பியது. இதுகுறித்து திருச்சி மாநகரக் குற்றப் பிரிவில் முருகேசன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் 6 போ் மீதும் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.