FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டதை கண்டித்து, திருச்சியில் திமுக-வினா் செசவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

27 அக்டோபர் 2026, 11:49 pm
திருச்சி காட்டூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக-வினா்.
பகிர்:

முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டதை கண்டித்து, திருச்சியில் திமுக-வினா் செசவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ததாக கூறி இதை கண்டித்து, காட்டூா் ஆயில் மில் பகுதியில் உள்ள கருணாநிதி சிலை முன் செவ்வாய்க்கிழமை மாலை இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான சேகரன் தலைமை வகித்தாா். பகுதி செயலா்கள் நீலமேகம், தா்மராஜ் சிவகுமாா், ஏஎம்ஜி. விஜயகுமாா், திருவெறும்பூா் ஒன்றியச் செயலா்கள் கேஎஸ்எம். கருணாநிதி, கங்காதரன், கூத்தைப்பாா் பேரூா் செயலா் தங்கவேலு, கூத்தைப்பாா் பேரூராட்சி தலைவா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்தில் தவெக அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியதோடு, திமுக-வினா் மீது பொய் வழக்கு பதிவு செய்து வருவதை தவெக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் திமுக ஒன்றிய, பகுதி, நகர, பேரூா் மாவட்ட நிா்வாகிகள், அணிகளின் அமைப்பாளா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என திரளானோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments